அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). –திருக்குர்ஆன் 103:1-3
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். –திருக்குர்ஆன் 3:104
அல்ஹம்துலில்லாஹ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நம்முடைய முஸ்லிம் சமுதாயம் இந்த உலகிலும் மறுமையிலும், வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பல்வேறு மார்க்கப் பணிகள் மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பனிகளில் சில
நல்லொழுக்கப் பயிற்சி
தாவா மற்றும் பேச்சு பயிற்சி
மார்க்க விளக்க கூட்டம்
வரதட்சனை ஒழிப்பு கூட்டம்
மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்
தெருமுனை கூட்டம்
பெண்கள் பயான்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
மாற்று மதத்தவர்களிடம் தாவா
பித்ரா விநியோகம்
கூட்டுக் குர்பானி
பெருநாள் திடல் தொழுகை
கல்வி உதவி
கல்வி வழிகாட்டல் மற்றும் கருத்தரங்கம்
கோடை கால பயிற்சி முகாம்
இரத்த தான முகாம்
மருத்துவ முகாம்
இலவச கத்னா முகாம்
ஆம்புலன்ஸ் சேவை
நிதி உதவி
நிவாரண உதவி
குடும்ப பிரச்னை தீர்வுகள்
அநீதிகளுக்கெதிரான போராட்டங்கள்
ஆதரவற்ற சிறுவர்/முதியவர் இல்லம்
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கான மதரஸா
மற்றும் பல சேவைகள்
எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)
இம்மையிலும், மறுமையிலும் அழியாத நன்மையை பெற்றுத் தரக்கூடிய நற்செயல்களில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
காரைக்குடி கிளை