Monday, September 20, 2010
பித்ரா விநியோகம்
செப்டம்பர் 9, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் நோன்பு பெருநாள் தர்மம் பித்ராவை கூட்டாக வசூலித்து சுமார் 45,000 ருபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் தகுதியுள்ள 350 ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
(குறிப்பு: ஒரு ஸாஉ என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)
பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன் இந்த தர்மத்தை வழங்கிவிட வேண்டும், பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்கக் கூடாது. பித்ரா திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கு புகாரி 3275, 5010 ஹதீஸ்கள் ஆதரமாக அமைந்துள்ளது.