- மூன்று மாத தவணையில் ரூ. 10, 0000 /- வரை வட்டியில்லா கடனுதவி (பைத்துல்மால்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- கல்வி, மருத்துவ, வாழ்வாதார உதவிகள் தேவையுள்ள மக்களை சென்றடையும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது
- ரமளானில் 371 முஸ்லிம் குடும்பங்களுக்கு ரூபாய் 1,25,200 /- மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
- முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” ஒன்று நடத்தப்பட்டது.
- சுமார் 73 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 300 /- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
- ஹஜ் பெருநாள் கூட்டுக் குர்பானி மூலம் 86 முஸ்லிம் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. கூட்டுக் குர்பானிக்காக ரூபாய். 96,000 /- திரட்டப்பட்டது.
- இரு பெருநாட்களிளும் நபி வழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.
- கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாமில் 110 ஆண் பிள்ளைகளும், 102 பெண் பிள்ளைகளும் கலந்து கொண்டனர், 12 நாட்கள் நடைபெற்ற முகாமின் மொத்த செலவு ரூபாய். 3,60,000 /- ஆகும்.
- இரத்ததான முகாமில் 54 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
- அநீதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கும், மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்களுக்கும் மக்களை திரட்டி அழைத்துச் செல்லப்பட்டது. இரண்டு பொதுக்கூட்டங்கள் ரூபாய். 96,000 /- செலவில் நடத்தப்பட்டது.
- தர்காக்களில் நடக்கும் பித்தலட்டங்களை அம்பலப்படுத்த “தர்காக்களில் நடப்பது என்ன” என்ற குறுந்தகடு 1000 முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
- குர்ஆன் வசனங்கள் கொண்ட காலண்டர் 1000 முஸ்லிம் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.
- இஸ்லாமிய சமூகத்தில் நடைபெரும் அனாச்சாரங்களை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் & சுவரொட்டி மற்றும் நோட்டீஸ் பிரச்சாங்கள் செய்யப்பட்டது.