Thursday, December 5, 2013
Tuesday, September 17, 2013
மஸ்ஜிதுர் ரஹ்மான் முதல் தளம்
மஸ்ஜிதுர் ரஹ்மான் முதல் தளம் கட்டுமானப் பணிகள் தொடங்கி
விட்டன. உங்களுடைய பொருளாதாரங்களை விரைந்து வழங்கி
அல்லஹ்வின் அளப்பெரும் நன்மைகளை பெற்றிடுங்கள் இன்ஷாஅல்லாஹ் !
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3jh5RK5vUgoaLzryHkotnpMKBaGy-fV3qIDaBpLfhio2SL2J790iPKH6eY5HEtS9sWcUnESkqv5OU_Tyn8mKxRsVZI1q9RhlWDNwY87dgNpUf3JqYRNKDh8ZYzja3MgIuvC4YvNxOWmAx/s144/%25E0%25AE%25AA%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF-6.jpg
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் மக்களின்
இம்மை, மறுமையின் நன்மைக்காக செயல்பட்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ் !
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் கீழ்தளம் எழுப்பப்பட்டு கடந்த
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக
தொழுகை, மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. தற்போது
முதல் தளம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நிரந்தர நன்மையை பெற்றுத் தரும் இந்த உயர்ந்த பணிக்கு உங்களுடைய
பொருளாதாரங்களை விரைந்து வழங்கி அல்லஹ்வின் அளப்பெரும் நன்மைகளை பெற்றிடுங்கள்
இன்ஷாஅல்லாஹ் !
அன்புடன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (மஸ்ஜிதுர் ரஹ்மான்)தவ்ஹீத் பள்ளிவாசல் தெரு
சின்னையா அம்பலம் பள்ளி மேற்கு
காரைக்குடி –630 001
கடந்த ஓராண்டில் நடைபெற்ற செயல்பாடுகளில்...
- மூன்று மாத தவணையில் ரூ. 10, 0000 /- வரை வட்டியில்லா கடனுதவி (பைத்துல்மால்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- கல்வி, மருத்துவ, வாழ்வாதார உதவிகள் தேவையுள்ள மக்களை சென்றடையும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது
- ரமளானில் 371 முஸ்லிம் குடும்பங்களுக்கு ரூபாய் 1,25,200 /- மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
- முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” ஒன்று நடத்தப்பட்டது.
- சுமார் 73 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 300 /- ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
- ஹஜ் பெருநாள் கூட்டுக் குர்பானி மூலம் 86 முஸ்லிம் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. கூட்டுக் குர்பானிக்காக ரூபாய். 96,000 /- திரட்டப்பட்டது.
- இரு பெருநாட்களிளும் நபி வழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது.
- கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாமில் 110 ஆண் பிள்ளைகளும், 102 பெண் பிள்ளைகளும் கலந்து கொண்டனர், 12 நாட்கள் நடைபெற்ற முகாமின் மொத்த செலவு ரூபாய். 3,60,000 /- ஆகும்.
- இரத்ததான முகாமில் 54 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
- அநீதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கும், மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்களுக்கும் மக்களை திரட்டி அழைத்துச் செல்லப்பட்டது. இரண்டு பொதுக்கூட்டங்கள் ரூபாய். 96,000 /- செலவில் நடத்தப்பட்டது.
- தர்காக்களில் நடக்கும் பித்தலட்டங்களை அம்பலப்படுத்த “தர்காக்களில் நடப்பது என்ன” என்ற குறுந்தகடு 1000 முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
- குர்ஆன் வசனங்கள் கொண்ட காலண்டர் 1000 முஸ்லிம் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.
- இஸ்லாமிய சமூகத்தில் நடைபெரும் அனாச்சாரங்களை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் & சுவரொட்டி மற்றும் நோட்டீஸ் பிரச்சாங்கள் செய்யப்பட்டது.
Sunday, August 18, 2013
காவி கும்பலுக்கு பதிலடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அடிக்கடி பொதுகூட்டம் நடத்தி முஸ்லிம்களை விமர்சித்த காவி கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக காரைக்குடியில் 18.8.13. கடந்த அன்று சுதந்திரப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துனைப்பொதுச்செயலளார் முகமது யூசுப் 'இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பிலும் அடுத்து மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் 'இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில துனைப்பொதுச்செயலளார் முகமது யூசுப் 'இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பிலும் அடுத்து மேலாண்மைக் குழு உறுப்பினர் பக்கீர் முகமது அல்தாபி அவர்கள் 'இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Friday, August 9, 2013
நோன்பு பெருநாள் திடல் தொழுகை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர், அல்ஹம்துலில்லாஹ் !
ஃபித்ரா விநியோகம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 2013 ரமளானில் 371 ஏழை
குடும்பங்களுக்கு ரூபாய் 1,25,200
/- மதிப்பில் ஃபித்ரா பொருட்கள்
விநியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !
Friday, April 12, 2013
மருத்தவ உதவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்தவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !
Thursday, June 9, 2011
கந்தூரியை எதிர்த்து நோட்டிஸ் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிளையில், கடந்த 9.6.11 அன்று கந்தூரியை முன்னிட்டு “அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்” என்ற நோட்டிஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. 1000 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Tuesday, June 7, 2011
தாயத்து ஒரு வழிகேடு
நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் அறியாமையின் காரணமாக சையது என்ற சகோதரார் கையில் அணிந்திருந்த தாயத்தை தாவா செய்து அவிழ்க்கும் காட்சி...அல்ஹம்துலில்லாஹ்
சல்லிக் காசுக்காக விற்கப்படும் இந்த குப்பிகளேல்லாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை விளங்கி நேர் வழிக்கு திரும்ப அல்லாஹ் இந்த சகோதரருக்கு உதவி செய்வானாக !
Monday, June 6, 2011
தாவா
நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் விரக்தியில் இருந்த ஒர் சாகோதிரியின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு அறிவுரைகளையும் மற்றும் “இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை” என்ற புத்தகமும் வாழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !
Sunday, June 5, 2011
நபிவழித் திருமணம்
நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் 5.06.2011 அன்று சகோதரர் அப்துல்லாஹ் என்பவரின் மகளுடைய திருமணம் நபி வழியில் நடைப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ் !
தாயீக்களின் கூட்டம்
நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் சிவகங்கை மாவட்ட தாயீக்களின் கூட்டம் கடந்த 5.6.11 நடைபெற்றது. இதில் தாயிக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
Monday, May 30, 2011
பெண்கள் பயான்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் 30.5.11 நெல்மண்டி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் திரளாக கலந்துக் கொண்டனார். சகோதரர் சீனிமுகம்மது உரையற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !
Wednesday, May 25, 2011
நிதியுதவி
அல்லாஹ்வின் பேரருளால் நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையின் சார்பாக கடந்த 15-5-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 25,000/- இருபத்தைந்து ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Sunday, May 22, 2011
ரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி கிளையில் 28.5.11 அன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 22 சகோதரர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனார். அல்ஹம்துலில்லாஹ் !
தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கிளையில் 22.05.2011 அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரர் அர்ஷத் பாடம் நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ் !
Friday, May 13, 2011
அல்ஹம்துலில்லாஹ் !
ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
Wednesday, April 20, 2011
கோடைகால பயிற்சி முகாம்
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20-4-11 அன்று இனிதே துவங்கியது, அல்ஹம்துலில்லாஹ்.
மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 125 மாணவியர்களும் 92 மாணவர்ளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த 29-4-11 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.
மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 125 மாணவியர்களும் 92 மாணவர்ளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த 29-4-11 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.
Sunday, April 17, 2011
காரைக்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான்
காரைக்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்..
அரசு பொது மருத்துவமணையில் தாவா
அல்லாஹ்வின் பேரருளால் நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையின் சார்பாக காரைக்குடி அரசு பொது மருத்துவமணையில் புதிதாக பயிற்சி பெற்றுவந்த தாயிக்கள் 17-04-2011 அன்று நோயாளிகளை கண்டு ஆருதல் கூரி தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் ..
Subscribe to:
Posts (Atom)